சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன


சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
x
தினத்தந்தி 13 Nov 2018 9:12 AM GMT (Updated: 13 Nov 2018 9:12 AM GMT)

சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து 4.3 லட்சம் சைபர் தாக்குதல்கள் இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளது.

பின்னிஷ் சைபர் நிறுவனம்  ஹனிஸ்பாட் தகவல்படி  ரஷ்யா, அமெரிக்கா, சீனா, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து  இந்தியா 436,090 சைபர்  தாக்குதல்களை சந்தித்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் அமெரிக்காவில் இருந்து இந்த ஆண்டு மட்டும்  ஜனவரி மற்றும்  ஜூன் மாதங்களுக்கு இடையே 73 ஆயிரம் தாக்குதல்கள்  நடைபெற்று உள்ளன.

ரஷ்யாவில் இருந்து அதிக சைபர் தாக்குதல்கள் நடைபெற்று உள்ளன.  ரஷ்யாவில் இருந்து 2,55589 தாக்குதல்களும் அடுத்தபடியாக அமெரிக்காவில் இருந்து  103458 தாக்குதல்களும், சீனாவில் இருந்து 42544 தாக்குதல்களும் 
நெதர்லாந்தில் இருந்து 19169 தாக்குதல்களும் ஜெர்மனியில் இருந்து 15330 தாக்குதல்களும் நடைபெற்று உள்ளன.

மறுபுறம், இந்திய சைபர் தாக்குதல்களால் ஆஸ்திரியா, நெதர்லாந்து, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் உக்ரைன் ஆகிய 5 நாடுகள் இலக்கு வைக்கப்பட்டது. மொத்தம் 36,563 தாக்குதல்கள்.

ஆஸ்திரியா (12,540), நெதர்லாந்து (9,267), இங்கிலாந்து (6,347), ஜப்பான் (4,701) மற்றும் 3,708 தாக்குதல்கள் உக்ரைனின் வர்த்தகத்தை இலக்காகக் கொண்டன.

Next Story