பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?


பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
x
தினத்தந்தி 13 Nov 2018 12:32 PM GMT (Updated: 13 Nov 2018 12:32 PM GMT)

சவூதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதற்கான நேரடி ஆதாரம் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

வாஷிங்டன் 

சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தவர் அந்த நாட்டின் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி (59). சமீபத்தில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய துணை தூதரகத்துக்கு கடந்த 2-ம் தேதி சென்ற அவர் மாயமானார்.

அவர் அந்த தூதரகத்துக்குள் வைத்து சவுதி அரேபிய ஏஜெண்டுகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று பல தரப்பிலும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை இதுவரை சவுதி அரேபியா மறுத்து வந்தது.

பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி சவுதி அரேபியாவால் கொலை செய்யப்பட்டிருந்தால், அந்த நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்தார்.

இது ஒரு சர்வதேச கண்டனத்தைத் ஏற்படுத்தியதுடன்  மேற்கு நாடுகளுடனான உறவுகளுக்கு சவுதி அரேபியாவுக்கு நெருக்கடி அளித்தது .பின்னர் மெதுவாக சவுதி அரேபியா அதனை ஒத்து கொண்டது.

கடந்த 2-ஆம் தேதி கசோகி, சவுதி தூதரகத்தில் ஒவ்வொரு விரலாக துண்டித்து சித்ரவதை செய்து பின்பு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் அரசு நாளிதழ் ‘யேனி சபாக்’ செய்தி வெளியிட்டது.

சவுதியின் 15 பேர் கொண்ட குழுவினர் கசோகியை கொன்றதாக துருக்கி  ஏற்கனவே தெரிவித்துள்ளது. இந்நிலையில், யேனி சபாக்கில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், எங்களுக்கு கிடைத்துள்ள பல்வேறு ஆடியோ ஆதாரங்களின்படி, கடந்த 2-ம் தேதி சவுதியின் தூதரகத்தின் உள்ளே கசோகியின் விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து, அவரது தலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது துருக்கியின் சவுதி தூதர் முகமது அல் ஒட்டாய்பி, ‘இந்த சித்ரவதையை வெளியில் செய்யுங்கள், நீங்கள் என்னை பிரச்சினையில் சிக்க வைக்க முயற்சி செய்கிறீர்கள்’ என்று கூறுகிறார். அதற்கு நபர் ஒருவர், ‘நீ சவுதிக்கு வந்து உயிருடன் வாழ வேண்டும் என்று கருதினால் வாயை மூடிக் கொண்டு சும்மா இரு’என்று மிரட்டுகிறார். என  அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் சவூதி அரேபிய இளவரசர்  முகம்மது பின் சல்மானுக்கு பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் தொடர்பு இருப்பதாக  நேரடி ஆதாரம்  இருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி இஸ்தான்புல் நகரில் சவுதி தூதரகத்தில் நடக்கும் சம்பவங்களை பதிவு செய்த இரகசிய ஒலி நாடாக்களில் கொலை செய்த  குழு உறுப்பினர் ஒருவர், கசோகி கொல்லப்பட்ட பின்னர் உடனடியாக 'உங்கள் முதலாளிக்குச் சொல்லுங்கள்' என்று கூறுவதை சுட்டிகாட்டுகிறது.

அக்டோபர் 2-ஆம் தேதி இஸ்தான்புல்லில் சவுதி தூதரகத்தில் கசோகி தடுத்து வைக்கப்பட்ட பிறகு, இளவரசரிடம் இருந்து  கசோகிக்கு ஒரு அழைப்பு வந்தது என்று கடந்த மாதம் முன்னர் ஒரு துருக்கிய செய்தித்தாள் தகவல் வெளியிட்டு இருந்தது. அப்போது கசோகியை இளவரசர்  சமாதானபடுத்த முயன்று உள்ளதாக அதில் கூறப்பட்டு இருந்தது.

Next Story