உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 4:53 PM GMT)

* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வருகிற காட்டுத் தீயில் பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

* பாலஸ்தீனம் நடத்திய ராக்கெட் தாக்குதலில் சிக்கி இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியானார். படுகாயம் அடைந்த ஒரு பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் பாலஸ்தீனத்தில் அல் அக்சா டி.வி. நிலைய கட்டிடம் தரை மட்டமானது.

* அமெரிக்காவில் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவன முன்னாள் ஊழியரான இந்தியர் சலீல் பருலேகர், போலி ஆவணங்கள் மூலம் தனது நிறுவனத்தில் இருந்து 9.3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.67 கோடியே 89 லட்சம்) திருடி விட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற செனட் சபைக்கு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கிர்ஸ்டன் சினிமா வெற்றி பெற்றார் என நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் இருந்து 1994–க்கு பிறகு பெண் ஒருவர் செனட் தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.


Next Story