பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து


பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது- முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடி கருத்து
x
தினத்தந்தி 14 Nov 2018 10:29 AM GMT (Updated: 14 Nov 2018 10:29 AM GMT)

பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவை இல்லை, அதனால் 4 மாகாணங்களை கூட கையாள முடியாது என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

பாகிஸ்தானில் நடந்து வரும்  அரசு நிர்வாகம்  மோசமாக உள்ளதாக  முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவை இல்லை,  அதனால்  4 மாகாணங்களை கூட கையாள முடியாது என கூறி உள்ளார்.

பாகிஸ்தானின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி காஷ்மீர் விவகாரத்தில் ஒரு கருத்து தெரிவித்து உள்ளார். லண்டனில் ஒரு  பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய, முன்னாள் பாகிஸ்தான் ஆல்  ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு  காஷ்மீர் தேவையில்லை என்றும் காஷ்மீர் சுதந்திரம் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி  உள்ளார்.

எனினும், பாகிஸ்தானில் ஒற்றுமை மற்றும் தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும் முயற்சிகளில் தோல்வி அடைந்ததை ஒப்புக் கொண்டாலும், காஷ்மீரில் மக்கள் செத்து  கொண்டிருக்கிறார்கள் மற்றும் அப்பாவிகள் மரணம்  கவலையை  ஏற்படுத்துகிறது. அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் மக்கள் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தானில் மோசமான நிர்வாகம் நடக்கிறது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. அதனால்  நான்கு மாகாணங்களைக் கூட கையாள முடியாது.

"காஷ்மீரை இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ கட்டுப்படுத்தக் கூடாது, மாறாக காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும்"

காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையேயான முக்கிய அம்சமாக இருக்கும் என புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் இம்ரான் கான் அவரது முதல் உரையில் குறிப்பிட்டு இருந்தார்.

காஷ்மீர் பிரச்சினை பற்றி அப்ரிடி கருத்தை வெளியிடுவது இது முதல் தடவை அல்ல. முன்னதாக அவரது டுவிட்டில்  "இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீர்" என்று குறிப்பிட்டு இந்தியர்களை கோபப்படுத்தி அவர் எழுதியிருந்தார்.

Next Story