சிங்கப்பூரில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை


சிங்கப்பூரில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 14 Nov 2018 12:49 PM GMT (Updated: 14 Nov 2018 1:34 PM GMT)

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் சிங்கப்பூரில் இன்று வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூருக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் உடன் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.  இந்த சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தக ஒத்துழைப்பு, தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு தரப்பு மற்றும் உலகளாவிய விவகாரங்களில் பரஸ்பர விருப்பங்கள் பற்றி விரிவான அளவில் பேசப்பட்டு உள்ளது.

தெற்காசிய உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அனைத்து வழிகளிலும் ஆக்கப்பூர்வமுடன் அமைந்திருந்தது என இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பு நிர்வாகி ரவீஷ் குமார் கூறியுள்ளார்.

இந்த சந்திப்பு பற்றி பென்ஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இந்தோ-பசிபிக் விவகாரத்தில் எங்களது திறந்த மற்றும் வெளிப்படையான பார்வையை பற்றி பகிர்ந்து கொண்டோம்.  பாதுகாப்பினை வலுப்படுத்துவது மற்றும் தீவிரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் செயல்படுவது என்பதனை மீண்டும் நாங்கள் உறுதி செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Next Story