உலக செய்திகள்

இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்.பிக்கள் இடையே கைகலப்பு + "||" + Sri Lankan parliament, there is a clash between Ranil and Rajapaksa MPs

இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்.பிக்கள் இடையே கைகலப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்.பிக்கள் இடையே கைகலப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்.பிக்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றியது. இதைத் தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து கடந்த மாதம் 26-ந்தேதி சிறிசேனா நீக்கினார்.

புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார். அத்துடன் நாடாளுமன்றத்தையும் முடக்கி வைத்த அவரது நடவடிக்கையால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டது. சிறிசேனாவின் இந்த திடீர் நடவடிக்கைக்கு உள்நாட்டு தலைவர்கள் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளும் கண்டனம் தெரிவித்தன. எனவே 14-ந் தேதி (நேற்று) நாடாளுமன்றத்தை கூட்ட அவர் ஒப்புதல் அளித்தார்.

ஆனால் ராஜபக்சே அரசுக்கு போதுமான எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்து சிறிசேனா உத்தரவிட்டார். ஆனால், சிறிசேனாவின் பாராளுமன்ற கலைப்பு உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்த கடும் அரசியல் குழப்பத்துக்கு நடுவில், இலங்கை பாராளுமன்றம் நேற்று கூடியது. அவையில் கடும் அமளி நிலவியது. இந்த களேபரத்துக்கு மத்தியிலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எடுத்துக்கொண்ட சபாநாயகர், அதன்மீது ஓட்டெடுப்பும் நடத்தினார். ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். 

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை மீண்டும் இலங்கை நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தில் பேசிய ராஜபக்சே, நேற்றைய தினம் நாடாளுமன்ற வரலாற்றில் கருப்பு தினம் என்றார். மேலும், அதிபராக இருந்த எனக்கு பிரதமர் பதவி முக்கியம் இல்லை எனவும் ஆவேசமாக பேசினார். 

இதற்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ராஜபக்சே மற்றும் ரனில் விக்ரமசிங்கே தரப்பு எம்.பிக்கள் இடையே கை கலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை முற்றுகையிட்டும் ராஜபக்சே ஆதரவு எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாடாளுமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கை நாடாளுமன்றத்தில் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நம்பிக்கை தீர்மானம்
இலங்கையில் பதவிநீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை தீர்மானம் 117 உறுப்பினர் ஆதரவுடன் நிறைவேறியது.
2. இலங்கை நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் நாளை வரை ஒத்திவைப்பு
இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியதும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து நாடாளுமன்றம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
3. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதிப்பு
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
4. உலகைச்சுற்றி...
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பதற்கு, ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.
5. இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை : மு.க ஸ்டாலின்
இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா கலைத்திருப்பது ஜனநாயக பச்சைப்படுகொலை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.