உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 15 Nov 2018 10:45 PM GMT (Updated: 15 Nov 2018 4:34 PM GMT)

* ஜெருசலேம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த 4 அதிகாரிகளை குத்தி காயம் ஏற்படுத்தினார். அவர் கைது செய்யப்பட்டு விட்டார்.

*  வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வரும் ஜனவரி மாதம் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் என அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் அறிவித்தார். அதே நேரத்தில் அணு ஆயுதங்கள் ஒழிப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முறியும் விதத்தில் கடந்த முறை செய்த தவறுகளை மீண்டும் செய்ய மாட்டோம் என அவர் கூறினார்.

*   அமெரிக்காவில் மிசிசிப்பி மாகாணத்தில் நேற்று முன்தினம் சுற்றுலா பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 44 பேர் படுகாயம் அடைந்தனர்.

*  அமெரிக்க அப்பீல் கோர்ட்டு நீதிபதி பதவிக்கு இந்திய வம்சாவளி பெண் நியோமி ராவை தேர்வு செய்து, அதற்கான அறிவிக்கையை நாடாளுமன்ற செனட் சபைக்கு ஜனாதிபதி டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் வேறு ஒரு நாளில் அதன்மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.

*  அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்தது. 130 பேர் காணாமல் போய்விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story