டிரம்ப் மனைவியுடன் மோதல் எதிரொலி : வெள்ளை மாளிகை பெண் அதிகாரி நீக்கம்


டிரம்ப் மனைவியுடன் மோதல் எதிரொலி : வெள்ளை மாளிகை பெண் அதிகாரி நீக்கம்
x
தினத்தந்தி 15 Nov 2018 11:30 PM GMT (Updated: 15 Nov 2018 9:52 PM GMT)

அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக பதவி வகித்து வந்தவர் மீரா ரிகார்டல். இந்தப் பெண் அதிகாரிக்கும் ஜனாதிபதி டிரம்பின் மனைவி மெலனியா டிரம்புக்கும் ஒத்து போகவில்லை.

வாஷிங்டன்,

ஆப்பிரிக்காவுக்கு விமான பயணம் மேற்கொண்டபோது, இருக்கை ஒதுக்கீட்டில் அவர்களிடையே மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

அப்போது மெலனியா டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘ வெள்ளை மாளிகையில் நான் நம்பாத அதிகாரிகள் உள்ளனர். எனது சிறந்த ஆலோசனைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பேன். அவர் தான் விரும்புவதை செய்வார்’’ என கூறினார்.

அதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பாக மெலனியா டிரம்ப், ‘‘ வெள்ளை மாளிகையில் கவுரவத்துடன் பணியாற்றுகிற தகுதி மீரா ரிகார்டலுக்கு இனி இல்லை’’ என்று கூறினார். அப்போதே அவர் நீக்கப்பட்டு விடுவார் என யூகங்கள் வெளியாகின. இது இப்போது உண்மையாகி உள்ளது.

அவர் வெள்ளை மாளிகையில் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பதவியில் இருந்து நேற்று முன்தினம் நீக்கப்பட்டுள்ளார். இதை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் உறுதி செய்தார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘ மீரா ரிகார்டல் வெள்ளை மாளிகையில் இருந்து விடைபெறுகிறார். டிரம்ப் நிர்வாகத்தில் புதிய பங்களிப்புக்கு அவர் மாற்றப்படுகிறார்’’ என கூறினார். மேலும், ‘‘அவர் ஜனாதிபதி டிரம்புக்கு தனது ஆதரவை தொடருவார்’’ எனவும் குறிப்பிட்டார்.


Next Story