பத்திரிகையாளர் ஜமால் கொலைக்கு பின்னால் இளவரசர் முகம்மது பின் சல்மான் இல்லை -அரசு வழக்கறிஞர்


பத்திரிகையாளர் ஜமால் கொலைக்கு பின்னால் இளவரசர் முகம்மது பின் சல்மான் இல்லை -அரசு வழக்கறிஞர்
x
தினத்தந்தி 16 Nov 2018 6:37 AM GMT (Updated: 16 Nov 2018 6:37 AM GMT)

பத்திரிகையாளர் ஜமால் கொலைக்கு பின்னால் இளவரசர் முகம்மது பின் சல்மான் இல்லை என அரசு வழக்கறிஞர் கூறி உள்ளார்.

ரியாத்

சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் படுகொலையை முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த சவுதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது. உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு ஏஜெண்டுகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இந்த கொலையில் சவுதி அரேபியாவில் 21 பேர் கைதாகி, சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெறுகிறது.

கசோக்கியை கொலை செய்ய உத்தரவிட்டு, அதை நிறைவேற்றுவதற்கு சதித்திட்டம் தீட்டித்தந்து மேற்பார்வை செய்த குற்றச்சாட்டில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்குமாறு அரசு வக்கீல் கோரி உள்ளார்.

இளவரசர் முகம்மது பின் சல்மான்  ஜமால் கசோக்கியை கொலை செய்ய எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என   சவுதி அரசு வழக்கறிஞர் கூறி உள்ளார்.

Next Story