உலக செய்திகள்

ஜிம்பாப்வேயில் பஸ் தீப்பிடித்தது 42 பேர் பரிதாப சாவு + "||" + The bus caught fire kills 42 in Zimbabw

ஜிம்பாப்வேயில் பஸ் தீப்பிடித்தது 42 பேர் பரிதாப சாவு

ஜிம்பாப்வேயில் பஸ் தீப்பிடித்தது 42 பேர் பரிதாப சாவு
ஜிம்பாப்வே நாட்டின் ஜாவிஷாவானே நகரத்தில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் மியூசினா நகருக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

ஹராரே,

பஸ் அங்குள்ள புலவாயோ-பெயிர்பிரிட்ஜ் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியது. அதில் பயணம் செய்தவர்கள் தப்பிக்க முடியவில்லை.

இந்த கோர விபத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்தான் ஜிம்பாப்வேயில் ரூசாபே என்ற இடத்தில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி நேரிட்ட விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். அதன் சுவடு மறைவதற்கு முன் அங்கு மற்றொரு பஸ் தீப்பிடித்து அதில் பயணம் செய்தவர்கள் 42 பேர் பலியாகி இருப்பது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலியானவர்களின் உடல்கள் எரிந்து சாம்பலாகி விட்டதால் அடையாளம் காண முடியாத சூழல் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண் மூளைச்சாவு தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் திடீர் சாலை மறியல்
கர்ப்பப்பை அகற்றப்பட்ட பெண் மூளைச்சாவு அடைந்ததால், தவறான சிகிச்சை அளித்ததாக கூறி தனியார் மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. கரூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் பலி
கரூர் அருகே கோவில் திருவிழாவிற்கு தீர்த்தக்குடம் எடுக்க வந்த ஐ.டி.ஐ. மாணவர் உள்பட 3 பேர் காவிரி ஆற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
3. வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன் மீது கார் மோதியது; 2 பேர் பலி 8 பேர் படுகாயம்
வேளாங்கண்ணி அருகே ஆம்னி வேன் மீது கார் மோதியதில் 2 பேர் பலியானார்கள். 8 பேர் படுகாயமடைந்தனர்.
4. பஸ் சக்கரங்களில் சிக்கி வாலிபர் பலி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பரிதாபம்
அய்யம்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர், பஸ் சக்கரங்களில் சிக்கி பலியானார்.
5. குளித்தலை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பக்தர் உள்பட 2 பேர் பலி
குளித்தலை அருகே நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பக்தர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.