கலிபோர்னியா காட்டுத்தீயில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்வு: பாதிப்பை நேரில் பார்வையிடுகிறார் டிரம்ப்


கலிபோர்னியா காட்டுத்தீயில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்வு: பாதிப்பை நேரில் பார்வையிடுகிறார் டிரம்ப்
x
தினத்தந்தி 18 Nov 2018 10:17 AM GMT (Updated: 18 Nov 2018 10:17 AM GMT)

கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளது.

நியூயார்க்,

கலிபோர்னியா மாநிலத்தின் வடபகுதியில் பட்டி கவுண்டி பகுதியில் உள்ள பாரடைஸ் நகரம். இந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில்தான் காட்டுத் தீ கடந்த 8-ம் தேதி ஏற்பட்டது.

காட்டுப் பகுதியில் சிலர் தற்காலிக குடில் அமைத்து தங்கி இருந்தபோது, சமையல் செய்வதற்காக மூட்டப்பட்ட நெருப்பு காட்டுப் பகுதியில் உள்ள காய்ந்த மரங்கள் மீது பட்டு பரவிய தீ இன்னும் அணைக்க முடியாமல் தொடர்ந்து பற்றி எரிந்தது. பாரடைஸ் நகரில் ஏறக்குறைய 26 ஆயிரம் பேர் வசித்து வந்தனர்.

பாரடைஸ் பகுதியில் உள்ள 1,35 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காட்டுப் பகுதி உள்ளது. இதில்தான் தற்போது காட்டுத் தீ பரவி அணைக்க முடியாத அளவில் பற்றி எரிந்தது.. இந்த காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 1,011 உயர்ந்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களின் எரிந்து நாசமான வீடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியாவில் சேதங்களைப் பார்வையிட அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றுள்ளார்.

அங்கு தீ விபத்து ஏற்பட்ட பகுதிகள், இடம்பெயர்ந்தவர்கள் என அனைவரையும் சந்தித்து பேசுகிறார்.  தீயணைப்பு பணியில் முழு மூச்சுடன் போராடிய வீரர்களுக்கு ஜனாதிபதி டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

அமெரிக்க காட்டுத்தீ வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீ இதுதான் என்றும் கூறப்படுகிறது. 

Next Story