சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் பெறும் நிதி உதவி விவரங்களை கோரும் சர்வதேச நாணயம் நிதியம்


சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் பெறும் நிதி உதவி விவரங்களை கோரும் சர்வதேச நாணயம் நிதியம்
x
தினத்தந்தி 20 Nov 2018 8:48 AM GMT (Updated: 20 Nov 2018 8:48 AM GMT)

சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் பெறும் நிதி உதவி விவரங்களை சர்வதேச நாணயம் நிதியம் கோரி உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானுக்கு சீனா வழங்கி வரும் நிதியுதவியின் அனைத்து விவரங்களையும் தரவேண்டும் என  சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.

நிதி உதவி சிக்கல் மற்றும்  சமநிலை படுத்தும் வகையில் பாகிஸ்தான் சீனாவிடம் பெறும் நிதிஉதவி விவரங்களை பெற  சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

பேச்சுவார்த்தையின்  இறுதி கட்டத்தில்  சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

 சர்வதேச நாணய நிதியம் தலைவர்  ஹரால்ட் ஃபிங்கரின் தலைமையில், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இரு தரப்பினரும் எந்த உடன்பாட்டிற்கும் வரும்  எந்த அறிகுறியும் இல்லை என்று டான் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

நிதி அமைச்சர் அசத் உமர்  பேச்சுவார்த்தைகள் சாதகமானதாக இருந்தாலும்,  வேறுபாடுகள் நிறைந்ததாக  உள்ளதாக கூறி உள்ளார்

சீன நிதியுதவி குறித்து சீன நிதி அமைச்சர் கூறும் போது,   சீன நிதி உதவி  முழு வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்.  வெளியுறவுக் கடனும் சர்வதேச நாணய நிதியம்  உடனான திட்டத்தின் ஒரு பகுதியாக பகிரப்பட வேண்டும் என கூறி உள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மின்சக்தி நிதி 1.2 ட்ரில்லியனை  நீக்குவதற்கான ஒரு தெளிவான திட்டவட்டமான இலக்கை விரும்புகிறது. சில வங்கிகளை மீட்டெடுக்க நிர்வாக நடவடிக்கைகளை வரவேற்கிறது. 

சர்வதேச நாணய நிதியம் குழு பாகிஸ்தான் மின்சாரத் துறை சீர்திருத்த திட்டத்தில்  திருப்தி அடையவில்லை என தகவல்கள் கூறுகின்றன.

பாகிஸ்தான் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஜூன் மாதம் முடிவடைந்த நிதியாண்டில் 43 சதவீதமாக 18 பில்லியன் டாலராக அதிகரித்தது.  அதே நேரத்தில் நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Next Story