அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரம்ப் விதித்த தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை


அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரம்ப் விதித்த தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
x
தினத்தந்தி 20 Nov 2018 9:37 AM GMT (Updated: 20 Nov 2018 9:37 AM GMT)

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு டிரம்ப் விதித்த தடைக்கு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று கொண்ட பின்னர் டொனால்டு டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.  விசா நடைமுறைகளை கடுமையாக்கினார்.  கடந்த வருடம் சில முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்வதற்கு பயண தடை விதித்து உத்தரவிட்டார்.

இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியது.  ஆனால் தனது முடிவில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.  இந்த நிலையில், அவரது உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

அமெரிக்க நாட்டிற்குள் மத்திய அமெரிக்க நாடுகளில் வசிக்கும் மக்கள் சட்டவிரோத முறையில் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இதனை அடுத்து தேச பாதுகாப்பினை முன்னிட்டு அவர்கள் நுழைவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் தடை விதித்து உத்தரவிட்டார்.  அவர்கள் 26 அதிகாரப்பூர்வ மெக்சிகோ நாட்டு எல்லைகளில் ஒன்றின் வழியே அமெரிக்காவுக்குள் வருவதற்கு நிர்வாகத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், சான்பிரான்சிஸ்கோ நகரில் அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜோன் டைகார், டிரம்பின் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.

Next Story