தென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு - பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை


தென்கொரியாவில் 8 பெண்கள் கற்பழிப்பு - பாதிரியாருக்கு 15 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 22 Nov 2018 11:00 PM GMT (Updated: 22 Nov 2018 8:51 PM GMT)

தென்கொரியாவில், 8 பெண்களை கற்பழித்த பாதிரியாருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டணை விதிக்கப்பட்டது.

சியோல்,

தென் கொரியாவின் தலைநகர் சியோலில், மேமின் மத்திய தேவாலயம் என்ற பெயரில் மிகப்பெரிய தேவாலயத்தை நடத்தி வந்தவர் பாதிரியார் லீ ஜே ராக் (வயது 75).

1982-ம் ஆண்டு வெறும் 12 பேருடன் ஆரம்பித்த இந்த தேவாலயத்தில் இப்போது 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

அந்த ஆலயத்தின் உறுப்பினர்களாக உள்ள 3 பெண்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களை பாதிரியார் லீ, தனது அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டுக்கு அழைத்து, வலுக்கட்டாயமாக கற்பழித்து விட்டார் என புகார் செய்தனர்.

அவர்களில் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அவர் அரசரை விட மேலானவர். அவர்தான் கடவுள். அதனால்தான் அவர் கேட்டதை என்னால் மறுக்க முடியவில்லை” என்று கூறினார்.

இந்த 3 பெண்களைப் போன்று மேலும் 5 பெண்கள், பாதிரியார் லீ மீது போலீசில் கற்பழிப்பு புகார் செய்தனர். அதைத் தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான கற்பழிப்பு புகார்களை மறுத்தார்.

இருப்பினும் அவர் மீது சியோல் மத்திய மாவட்ட கோர்ட்டில் முறைப்படி வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையில், அவர் தனது ஆலயத்தில் உறுப்பினர்களாக உள்ள பெண்களை நீண்ட காலமாக கற்பழித்து வந்திருப்பது அம்பலமானது. இதையடுத்து அவர் குற்றவாளி என கருதி 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி சுங் மூன் சங் தீர்ப்பு அளித்தார்.


Next Story