உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 25 Nov 2018 10:15 PM GMT (Updated: 25 Nov 2018 8:40 PM GMT)

ஈராக் நாட்டில் வாசிட் மாகாணத்தில் இடைவிடாது பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


* ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது தொடர்பாக தைவானில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான மக்கள் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்ட அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாக்கு அளித்து உள்ளனர்.

* மத்திய அமெரிக்க நாடுகளின் அகதிகளை தடுக்கிற வகையில் மெக்சிகோ எல்லையை மூடப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

* நியூசிலாந்து நாட்டில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிவர்டன் நகரில் இருந்து 261 கி.மீ. தென் மேற்கில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 புள்ளிகளாக பதிவானது. இதன் சேத விவரம் எதுவும் தெரியவரவில்லை.

* ஈராக் நாட்டில் வாசிட் மாகாணத்தில் இடைவிடாது பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் பலியாகி விட்டனர்.

* ஜிம்பாப்வே நாட்டில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பின்லாந்து நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் பலியாகினர்.


Next Story