‘இன்சைட்’ விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது


‘இன்சைட்’ விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது
x
தினத்தந்தி 26 Nov 2018 8:11 AM GMT (Updated: 26 Nov 2018 8:11 AM GMT)

‘இன்சைட்’ விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குகிறது. இது டைம்ஸ் சதுக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

வாஷிங்டன்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய்க் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது.

அந்த விண்கலம், தற்போது மொத்த பயண தூரத்தில் பாதி தூரத்தைக் கடந்து சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த விண்கலம் மே 5-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணித்து உள்ளது. செவ்வாய் கிரகத்தில் விண்கலம் அமெரிக்க நேரப்படி இன்று மதியம் 3 மணியளவில்  தரையிறங்குகிறது.

இதனை டைம் சதுக்கத்தில் இது நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

செவ்வாய்க் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் பொருட்டு இந்த விண்வெளி ஓடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் உள்ளதா? என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும் என நாசா தகவல் தெரிவித்து உள்ளது. கியூரியாசிட்டி விண்கலத்தை அடுத்து இரண்டாவது விண்கலத்தை நாசா செவ்வாயில் தரையிறக்க உள்ளது.

Next Story