உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 27 Nov 2018 11:00 PM GMT (Updated: 27 Nov 2018 4:47 PM GMT)

* சீனாவில் லெஷான் நகரில், வேகமாக வந்த கார் ஒன்று அங்குள்ள பஸ் நிறுத்தத்தின் மீது மோதியது. இதில், 7 பேர் உடல் நசுங்கி பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

*     வங்காளதேசத்தில் அடுத்த மாதம் 30–ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில், ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் கலீதா ஜியா போட்டியிட அனுமதி இல்லை என அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டின் ஐகோர்ட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2 ஆண்டுக்கு அதிகமாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என அது கூறி உள்ளது. கலீதா ஜியாவுக்கு  5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நினைவுகூரத்தக்கது.

* மும்பை தாக்குதல்களின்போது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி, தண்டித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி வழங்குவதை உறுதி செய்யுங்கள் என்று பாகிஸ்தானை இஸ்ரேல் வலியுறுத்தி உள்ளது.

* அமெரிக்காவில் நியூயார்க்கில் சீன மக்கள் வாழும் பகுதியில், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது ஒரு வாகனம் மோதியது. இதில் ஒருவர் பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

*     ஜப்பான் நாட்டில் இபராகி மாகாணத்தில் நேற்று உள்ளூர் நேரப்படி காலை 8.33 மணிக்கு சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் உண்டா என தெரியவில்லை.

Next Story