உலக செய்திகள்

ஸ்டாக்கோம் விமான நிலைய கட்டிடத்தில் ஏர் இந்தியா விமானம் மோதியது + "||" + Air India plane hits building at Stockholm airport

ஸ்டாக்கோம் விமான நிலைய கட்டிடத்தில் ஏர் இந்தியா விமானம் மோதியது

ஸ்டாக்கோம் விமான நிலைய கட்டிடத்தில் ஏர் இந்தியா விமானம் மோதியது
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோம் விமான நிலைய கட்டிடத்தில் டெல்லி ஏர் இந்தியா விமானம் மோதியது.
ஸ்டாக்கோம்,

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கோம் நகரில் உள்ள  அர்லாண்டா விமான நிலையத்தில் 179 பயணிகளுடன்  நின்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் விமான நிலையத்தின் கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. 

விமானத்தின் வால் பகுதி விமான நிலைய கட்டிடத்தில் உரசியதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து நடைபெற்றதும், விமானத்தில் இருந்த 179 பயணிகளும் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று விமான நிலைய போலீசார் தெரிவித்தனர். 

இந்த விபத்துக்கான காரணம் பற்றி உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்து இருக்கிறது. சர்வதேச விமானங்களுக்கான முனையம் 5- ல் விமானம் நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு இருப்பதும், விமானத்தின் பாகம் கட்டிடத்தின் ஒரு பகுதியில் மோதி  இருப்பது போன்ற புகைப்படங்களும் உள்ளூர் ஊடகங்களில் வெளியாகின. விமானம் அருகே போலீஸ் வாகனங்களும் தீ தடுப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்ததால், ஏர்இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு
பாகிஸ்தான் தன்னுடைய வான்வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்த பின்னர் ஏர் இந்தியாவிற்கு ரூ.300 கோடி இழப்பு நேரிட்டுள்ளது.
2. ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிப்பு
ஏர் இந்தியா விமான சேவை 2-வது நாளாக பாதிக்கப்பட்டது.
3. சாப்ட்வேர் கோளாறு; 155 ஏர் இந்தியா விமானங்கள் இரவு 8.30 மணிவரை காலதாமதமுடன் இயங்கும்
சாப்ட்வேர் கோளாறால் இன்று இரவு 8.30 மணிவரை 155 ஏர் இந்தியா விமானங்கள் காலதாமதமுடன் இயங்கும்.
4. சர்வர் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பு
சர்வர் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
5. 2019-20-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை மத்திய அரசு அதிகாரி தகவல்
எதிர்வரும் 2019-20-ஆம் நிதி ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.