உலக செய்திகள்

ஜிம்பாப்வே: தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதல் - 12 பேர் பலி + "||" + Zimbabwe: Sugarcane truck collision with private bus - 12 killed

ஜிம்பாப்வே: தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதல் - 12 பேர் பலி

ஜிம்பாப்வே: தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதல் - 12 பேர் பலி
ஜிம்பாப்வே நாட்டில், தனியார் பேருந்துடன் கரும்பு லாரி மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.
ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டின் தென்கிழக்கில் அமைந்துள்ள சிபிங்கே பகுதியில் தனியார் பேருந்து ஒன்றும் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பரிதாபமாக பலியாகினர்.


இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஜிம்பாப்வேயில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெற்ற மூன்றாவது பெரிய சாலை விபத்து இதுவாகும். ஏற்கனவே, நவம்பர் 6-ந் தேதி ருசாபே பகுதியில் நடைபெற்ற விபத்தில் 50 பேரும், நவம்பர் 15-ந் தேதி மேற்கு நிக்கல்சன் பகுதியில் நடைபெற்ற பேருந்து விபத்தில் 42 பேரும் பலியானது குறிப்பிடத்தக்கது.