காஷ்மீர் விவகாரம் பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னிடம் கூறியது என்ன ? இம்ரான் கான் தகவல்


காஷ்மீர் விவகாரம் பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தன்னிடம் கூறியது என்ன ? இம்ரான் கான் தகவல்
x
தினத்தந்தி 4 Dec 2018 6:35 AM GMT (Updated: 4 Dec 2018 6:35 AM GMT)

இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான உறவை கடைபிடிக்க பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருவதாக இம்ரான் கான் கூறினார்.

இஸ்லமாபாத்,

காஷ்மீர் விவகாரம் பற்றி இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிடம் ஆலோசித்ததை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தற்போது நினைவு கூர்ந்து பேசியுள்ளார். 2004 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி கிடைக்காமல் இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும் என்று வாஜ்பாய் தன்னிடம் கூறியதாக இம்ரான் கான் தெரிவித்தார். வாஜ்பாயுடனான சந்திப்பின் போது, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி நட்வர் சிங்கும் உடன் இருந்ததாகவும் இம்ரான் கான் கூறினார்.  

இஸ்லமாபாத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இம்ரான் கான் இது பற்றி கூறியதாவது:- “ காஷ்மீர் பிரச்சினையை பொறுத்தவரை பேச்சுவார்த்தை இல்லாவிடில் தீர்வு காண்பது பற்றிய பல்வேறு அம்சங்களை விவாதிக்க முடியாது” என்றார். காஷ்மீர் பிரச்சினைய தீர்ப்பதற்கு உள்ள வாய்ப்புகள் பற்றி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த இம்ரான்கான், 2 அல்லது 3 தீர்வுகள் உள்ளன. காஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒருபோதும் தீர்வாகாது. இப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும். இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகளாகும். எனவே, இருநாடுகளுக்கும் இடையேயும் போர் ஏற்பட வாய்ப்பு இல்லை. 

இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான உறவை கடைபிடிக்க பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் தேர்தல் வர உள்ளதால், இந்தியா, எங்களோடு பேச்சுவார்த்தைக்கு ஆர்வம் காட்ட மறுக்கிறது” என்றார். 


Next Story