உலக செய்திகள்

சமாதானத்தை தக்க வைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி இருப்பதாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தகவல் + "||" + Time to back PM Modi on trying to maintain peace: US in message to Pak

சமாதானத்தை தக்க வைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி இருப்பதாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தகவல்

சமாதானத்தை தக்க வைக்கும்  முயற்சியில் பிரதமர் மோடி இருப்பதாக  பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தகவல்
சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிரதமர் மோடி இருப்பதாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாள் அரசு பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். மேலும் சமீபத்தில் மறைந்த முன்னாள் அதிபர் எச்.டபுள்யு புஷ்சுக்கு இரங்கல் தெரிவித்தார். இதற்கிடையில் அவர் அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஜிம் மாட்டீஸை சந்தித்து பேசினார். இரு நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. 

இந்த சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய ஜிம் மாட்டீஸ் கூறியதாவது: 

அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசு இந்தியாவுடன் சுமுக உறவில் எவ்வித முரண்பாடும் இல்லை. இரு நாட்டு புரிந்து கொள்ளுதலின்படியான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மோடி தலைமையிலான அரசு வரலாற்றில் இல்லாத அளவிற்கு தடைகள் அனைத்தையும் விலக்கியுள்ளது. இதனால் இருநாட்டு பாதுகாப்புதுறை ரீதியிலான உறவில் வேகமான முன்னேற்றம் காணப்படுகிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தெற்காசியாவில் சமாதானத்தை தக்க வைத்துக் கொள்ள முயலும் அனைவரும்  ஐ.நா.வின் முயற்சிக்கு  ஆதரவு தருவதற்கான நேரம் இதுவே. அண்டை நாடான ஆப்கானிஸ்தான் யுத்தம் முடிவடைந்தால் தாலிபனுடனான சமாதான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ஒரு முக்கிய பங்கை எடுக்க வேண்டும்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக  துணை கண்டத்தில் சமாதானத்திற்கு ஆதரவளிப்பதற்கும், ஆப்கானிஸ்தானில் நடக்கும் யுத்தத்திற்கு  ஒவ்வொருவரின்  பொறுப்புணர்வையும் நாடுகிறோம் என கூறினார்.

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு  எழுதிய கடிதம் குறித்து  நிருபர் ஒருவர் எழுப்பிய  கேள்விக்கு மாட்டீஸ் பதில் அளித்தார்.

ஆப்கானிஸ்தானில் சமாதான நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவைக் கோரினார். அந்த கடிதத்தில் டிரம்ப்  அமெரிக்கா- பாகிஸ்தான் உறவை கட்டமைப்பதில் பாகிஸ்தான் முழு ஆதரவையும்  வழங்குவது அடிப்படையாகும் என அதில் தெளிவாக கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடக்கம்
ஜம்முவில் உள்ள பூஞ்ச் - ஆக்கிரமிப்பு காஷ்மீர் ரவாலாகோட் பகுதிகளுக்கு இடையேயான வர்த்தகம் மீண்டும் தொடங்கியது.
2. அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி - சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி
அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிறுவர்கள் உள்பட 8 பேர் பலியாகினர்.
3. இத்தாலியின் ‘டயட் பீட்சா’
சமீபத்தில்தான் இத்தாலியில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்
4. யார் பயங்கரவாதி? அமெரிக்கா-ஈரான் வரலாறு காணாத மோதல்
அமெரிக்கா-ஈரான் இடையே வரலாறு காணாத மோதல் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுத பரவலால் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த ஈரானுடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செயல்படுத்தின.
5. பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலக கோப்பையை வெல்ல முடியாது -பாகிஸ்தான் வீரர்களுக்கு வாசிம் அக்ரம் அறிவுரை
பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உலகக் கோப்பையை வெல்ல முடியாது என வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விளாசி உள்ளார்.