உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல்5 தலீபான் பயங்கரவாதிகள் பலி + "||" + Air attack in Afghanistan 5 Taliban terrorists killed

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல்5 தலீபான் பயங்கரவாதிகள் பலி

ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதல்5 தலீபான் பயங்கரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் விமானப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் 5 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காபூல்,

ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் மீது உள்நாட்டுப் படைகளும், அமெரிக்க கூட்டுப்படைகளும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில்,  அங்கு நிம்ரோஜ் மாகாணத்தில்  காஸ்ரோட் மாவட்டத்தில் பதுங்கியுள்ள தலீபான் பயங்கரவாதிகளை குறி வைத்து ஆப்கானிஸ்தான் விமானப்படைகள் கடுமையான வான்தாக்குதலில் ஈடுபட்டன.

இந்த தாக்குதலில் 5 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.  4 பேர் படுகாயம் அடைந்தனர். 

இதுபற்றி ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் 215–வது பிரிவு செய்தி தொடர்பாளர் மேஜர் முகமது ரேஸா ரேஜாயீ கூறும்போது, ‘‘காஸ்ரோட் மாவட்டத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள் மீது விமானப்படை வான்தாக்குதல் நடத்தியது.  இதில் தலீபான் பயங்கரவாதிகள் பலத்த அடி வாங்கினர்’’ என்று குறிப்பிட்டார்.

இந்த தாக்குதல் நிம்ரோஜ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 

இது பற்றி தலீபான் பயங்கரவாதிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.