அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தாய்லாந்தில் பிரசார தடை நீக்கம் ராணுவ அரசு அறிவிப்பு


அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தாய்லாந்தில் பிரசார தடை நீக்கம் ராணுவ அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 11:30 PM GMT (Updated: 11 Dec 2018 5:31 PM GMT)

தாய்லாந்து நாட்டில் 2014–ம் ஆண்டு, பெண் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவை ஆட்சியில் இருந்து அகற்றி விட்டு, ராணுவம் புரட்சி செய்து ஆட்சிக்கு வந்தது.

பாங்காக், 

கடந்த ஆண்டு புதிய அரசியல் சாசனத்தை ராணுவ அரசு இயற்றியது. அதன்மீது பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மக்கள் புதிய அரசியல் சாசனத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.

இந்த நிலையில் அங்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24–ந் தேதி பொதுத்தேர்தல் நடத்துவது உறுதியாகி உள்ளது. அங்கு பிரசாரம் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அந்த தடையை ராணுவ அரசு நேற்று நீக்கி விட்டது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு தேர்தல் மூலம் ஜனநாயகம் மலருமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஏனென்றால், புதிய அரசியல் சட்டத்தின்படி தேர்தல் நடைபெற்ற பின்னரும் ராணுவம் செல்வாக்குடன் திகழ முடியும். செனட் சபை நியமனங்களை ராணுவம் செய்ய முடியும். இதன் மூலம் பிரதமர் யார் என்பதை ராணுவம் தீர்மானிக்கும் இடத்தில் இருக்கும்.

இப்போது பிரசார தடை நீக்கப்பட்டிருப்பதால், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்து தங்கள் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல வழி பிறந்துள்ளது.

தாய்லாந்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட யிங்லக் ஷினவத்ராவுக்கு முன்பாக பிரதமராக இருந்த தக்ஷின் ஷினவத்ராவும் அரசியல் செல்வாக்குடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story