உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா? பரபரப்பு தகவல்கள் + "||" + In US Parliament On the drum Impeachment?

அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் மீது கண்டன தீர்மானமா? பரபரப்பு தகவல்கள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில்  டிரம்ப் மீது கண்டன தீர்மானமா? பரபரப்பு தகவல்கள்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் மீது கண்டன தீர்மானம் கொண்டு வரப்படலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாஷிங்டன், 

அமெரிக்க நாட்டில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. அந்த தேர்தலுக்கான பிரசாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீது ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள், பாலியல் புகார்களை கூறினர்.

ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்கள், தங்களுடன் டிரம்ப் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே சொல்லி விடப்போவதாக மிரட்டியதாக கூறப்பட்டது. ஒருவேளை, இந்த விவகாரம் வெளியே கசிந்து விட்டால், அது ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு எதிராக திரும்பி விடும் என்பதால் அவர்களுக்கு டிரம்பின் வக்கீலாக இருந்த மைக்கேல் கோஹன் பணம் தந்து அவர்களின் வாயை அடைத்தார் என்று தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அமெரிக்க தேர்தல் நிதி சட்டத்தை மைக்கேல் கோஹன் மீறியதாக நியூயார்க் தெற்கு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, தன்மீது கூறப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளை மைக்கேல் கோஹன் ஒப்புக்கொண்டார்.

அப்போது அவர், ‘‘ஜனாதிபதி தேர்தலின்போது, டிரம்ப் தங்களுடன் செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதை வெளியே பகிரங்கப்படுத்திவிடுவோம் என்று சொன்ன 2 பெண்களின் வாய்களை அடைப்பதற்காக, அவர்களுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் டாலர் ( ஒரு டாலர் சுமார் ரூ.72) கொடுத்தேன். வேட்பாளரின் உத்தரவின்பேரில் நான் இதைச் செய்தேன்’’ என கூறினார்.

இந்த விவகாரத்தில் இப்போது டிரம்ப் மீது அமெரிக்க அரசு வக்கீல்கள் நியூயார்க் கோர்ட்டில் ஒரு ஆவணம் தாக்கல் செய்துள்ளனர். அந்த ஆவணத்தில், அவர்கள் முதல்முறையாக டிரம்ப் கூறித்தான், மைக்கேல் கோஹன் தேர்தல் நிதி சட்டத்தை மீறி உள்ளார் என நேரடியாக கூறி உள்ளனர்.

இது டிரம்புக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரத்தில் டிரம்ப் மீது அமெரிக்க நாடாளுமன்றத்தில் ‘இம்பீச்மென்ட்’ (கண்டன தீர்மானம்) கொண்டு வந்து நடவடிக்கை எடுக்க முடியும் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அமோக வெற்றி பெற்று, பிரதிநிதிகள் சபையை கைப்பற்றி உள்ளது. எனவே அந்த சபையில் தன் மீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக டிரம்ப் கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை ‘வெஸ்ட் விங்’ (ஜனாதிபதி அலுவலகம்) வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கையில், ‘‘டிரம்ப் சொல்லித்தான் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் உள்ளிட்ட 2 பெண்களுக்கு நிதி தந்து சட்டத்தை மீறியதாக மைக்கேல் கோஹன் கூறிய விவகாரத்தில் மட்டுமே டிரம்ப் மீது ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வர வாய்ப்பு உள்ளது’’ என கூறின.

இதில், ஜனாதிபதி பதவியில் இருந்து டிரம்ப் வெளியேறிய பின்னர், அவரை சிறைக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளதாக ஜனநாயக கட்சியினர் கருதுகின்றனர்.

இதுபற்றி அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் தலைவர் பதவியை ஏற்க உள்ள ஜெர்ரி நாட்லர் கருத்து தெரிவிக்கையில், ‘‘டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் மீது இம்பீச்மென்ட் கொண்டு வர முடியும்’’ என குறிப்பிட்டார்.

இதே போன்று ஜனநாயக கட்சி செனட் சபை எம்.பி. கிறிஸ் கூன்ஸ், ‘‘ டிரம்ப் பதவி முடிந்து வெளியே சென்ற பின்னர் அவர் மீது இம்பீச்மென்ட் கொண்டு வர முடியும்’’ என கருத்து தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தன்மீது பிரதிநிதிகள் சபையில் ‘இம்பீச்மென்ட்’ கொண்டு வரப்பட்டாலும், செனட் சபையில் அதற்கு வாய்ப்பு இல்லை என்று டிரம்ப் நம்புவதாக தகவல்கள் கூறுகின்றன.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு அலுவலகங்கள் மூடல் எதிரொலி :அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் வெளிநாட்டு பயணம் ரத்து - டிரம்ப் அதிரடி
அமெரிக்காவில் மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட தடுப்புச்சுவர் கட்டும் விவகாரத்தில் அந்த நாட்டின் நாடாளுமன்றம் 5.7 பில்லியன் டாலர் நிதி (சுமார் ரூ.40,470 கோடி) அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் கோரி வருகிறார். இதை எதிர்க்கட்சியான ஜனநாயகக்கட்சி நிராகரித்து விட்டது.
2. டிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்: ஏற்பாடுகள் தீவிரம்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
3. எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலையா? டொனால்டு டிரம்ப் பதில்
எல்லை சுவர் கட்டுவதற்காக தேசிய அவசர நிலை அறிவிப்பை நெருங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறுமியிடம் டிரம்ப் கேட்ட கேள்வி
அமெரிக்காவில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாடெங்கும் உள்ள குழந்தைகளுடன் ஜனாதிபதி டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் தொலைபேசியில் உரையாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
5. ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே நடக்கிறது : அமெரிக்க அதிபர் டிரம்புடன் மோடி சந்திப்பு
அர்ஜென்டினா நாட்டில் ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோர் ஒன்றாக சந்தித்து பேசுகின்றனர்.