உலக செய்திகள்

இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான் + "||" + India's negative attitude unhelpful in improving ties, accuses Pakistan

இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்

இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்
இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
இஸ்லாமாபாத்

பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசியா ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் கொள்கை ஆய்வு நிறுவனம் (IPRI) நடத்திய முக்கிய சக்திகளின் பங்களிப்பு என்ற தலைப்பில்  பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெஹ்மினா ஜன்ஜுவா பேசியதாவது:-

இஸ்லாமாபாத்தில் சார்க் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய  (SAARC) மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா மறுத்து விட்டது.

இந்தியாவின்  எதிர்மறை அணுகுமுறை இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கு உதவாது. மேலும் தெற்காசியா சமாதானம் அடைவதையும், முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்துகிறது.

இந்தியா "வெறுப்புணர்ச்சியை உண்டாக்குகிறது"  "டைனமிக் போட்டியை" நிலைநிறுத்துகிறது. நாங்கள் இப்பகுதியின் அமைதி மற்றும்  ஸ்திரத்தன்மைக்காக தொடர்ந்து முயற்சி செய்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்.

சமீபத்தில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க 2 + 2 பேச்சுவார்த்தை மூலம் மேம்பட்ட மற்றும் உணர்திறன்மிக்க அமெரிக்க இராணுவ வன்பொருள், தொழில்நுட்பம் மற்றும் ஆயுதம் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்குகிறது.

இது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் சமநிலையை குறைந்து விடும்.

இத்தகைய ஒரு ஆயுத போட்டி, இப்பகுதியின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக பாகிஸ்தான் கவலை கொண்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் எந்தவொரு அணு ஆயுதம் அல்லது வழக்கமான ஆயுதப் போட்டியை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது என்ற அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
2. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் - தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேச்சு
பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிராக பதிலடி கொடுக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பத்ராவதி தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா கூறினார்.
3. பாகிஸ்தான் நிதி மந்திரி திடீர் ராஜினாமா
பாகிஸ்தான் நிதி மந்திரி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
4. உலகைச் சுற்றி...
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் படின் மாவட்டத்தில் பயணிகள் பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பலியாகினர்.
5. காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு வெடிகுண்டுகள் சப்ளை செய்யும் சீனா
காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு சீன வெடிகுண்டுகளை பாகிஸ்தான் வழங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.