தப்பி ஓடவில்லை என்றால் 300 பைகளுடன் விஜய் மல்லையா சென்றது ஏன்? கோர்ட்டில் அமலாக்கத்துறை வக்கீல் கேள்வி


தப்பி ஓடவில்லை என்றால் 300 பைகளுடன் விஜய் மல்லையா சென்றது ஏன்? கோர்ட்டில் அமலாக்கத்துறை வக்கீல் கேள்வி
x
தினத்தந்தி 12 Dec 2018 11:45 PM GMT (Updated: 12 Dec 2018 8:18 PM GMT)

வங்கிக்கடன் மோசடி வழக்கில், விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்குகளுக்கான மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

லண்டன், 

நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி முன்பு இந்த மனு, நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையாவின் வக்கீல் அமித் தேசாய், ‘‘விஜய் மல்லையா ரகசியமாக வெளியேறவில்லை. ஜெனீவாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்கவே சென்றார்’’ என்று கூறினார். 

நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதற்கு அமலாக்கத்துறை வக்கீல் டி.என்.சிங் பதிலடி கொடுத்தார். ‘‘ஜெனீவா கூட்டத்துக்காக இந்தியாவை விட்டு சென்றதாக நிரூபிக்க அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. கூட்டத்துக்கு செல்வதாக இருந்தால், 300 பைகளுடனும், பெருமளவு சுமைகளுடனும் யார் செல்வார்கள்?’’ என்று அவர் கேட்டார்.

இதற்கிடையே, விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என்ற லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் தீர்ப்பு நகல், இங்கிலாந்து உள்துறை அலுவலகத்தை சென்று அடைந்தது.


Next Story