உலக செய்திகள்

பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை -தமிழக வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை + "||" + Flying plane Sexual harassment for a woman 9 years imprisonment for Tamil adu

பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை -தமிழக வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை

பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை -தமிழக வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக இளைஞருக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
வாஷிங்டன்

தமிழகத்தைச் சேர்ந்த பிரபு ராமமூர்த்தி (35) என்ற நபர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3-ஆம் தேதி லாஸ்வேகாஸில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு, பிரபு ராமமூர்த்தி தனது மனைவியுடன் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த இன்னொரு இளம்பெண் இரவு நேரம் என்பதால் தூங்கிவிட்டார். 

இந்நிலையில், தனக்கு ஏதோ அசௌகரியமாக இருப்பதாக உணர்ந்த அப்பெண் கண் விழித்து பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் சத்தம் போட்ட அந்த பெண், இது குறித்து விமானப் பணிப்பெண்களிடம் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, விமான நிலைய போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பிரபு ராமமூர்த்தி கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு டெட்ராய்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பிரபு ராமமூர்த்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் வாஷிங்டன் போஸ்ட் போலி பதிப்பால் பரபரப்பு
டொனால்டு டிரம்ப் ராஜினாமா உலகெங்கிலும் கொண்டாட்டம் என்ற வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் போலி பதிப்பால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
2. வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக வாலிபர் கைது
அமெரிக்க வெள்ளை மாளிகையை தகர்க்க திட்டமிட்டதாக கூறி இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3. அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை டொனால்டு டிரம்ப்
அமெரிக்காவில் தற்போதைக்கு அவசரப் பிரகடனம் அறிவிக்க போவதில்லை என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
அமெரிக்காவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
5. 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தல் -அமெரிக்கா
கிட்டத்தட்ட 100 அமெரிக்க குழந்தைகள் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாக அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் கூறி உள்ளார்.