உலக செய்திகள்

கூகுளில் இடியட் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்பின் புகைப்படம் வருவது ஏன் சிஇஒ சுந்தர் பிச்சை விளக்கம் + "||" + Sundar Pichai had to explain to Congress why Googling ‘idiot’ turns up pictures of Trump

கூகுளில் இடியட் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்பின் புகைப்படம் வருவது ஏன் சிஇஒ சுந்தர் பிச்சை விளக்கம்

கூகுளில் இடியட் என தேடினால் அமெரிக்க அதிபர்  டிரம்பின் புகைப்படம் வருவது ஏன்  சிஇஒ சுந்தர் பிச்சை விளக்கம்
கூகுளில் இடியட் என தேடினால் அமெரிக்க அதிபர் டிரம்பின் புகைப்படம் வருவது ஏன் என்பது குறித்த கேள்விக்கு கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சை விளக்கமளித்துள்ளார்.
சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்பு சுந்தர் பிச்சை ஆஜாரானார். அப்போது அவரிடம் கூகுள் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் எந்த ஒரு முகம் சுழிக்காமலும் பதிலளித்தார்.இது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஜோய் லாவ்க்ரேன் என்பவர், கூகுளில் இடியட் என்று தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புகைப்படம் வருவது ஏன் என்று கேள்வி கேட்டார்.அதற்கு சுந்தர் பிச்சை கூகுள் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. குறிப்பிட்ட ஒரு வார்த்தையைத் தேடும்போது, கூகுள் பலகோடி இணையப்பக்கங்களை ஆய்வு செய்யும்.

அதில், டிரம்ப் பெயரை பெரும்பாலானோர் என்ன அர்த்தத்துடன் பயன்படுத்துகின்றனர் உள்ளிட்ட 200 விஷயங்களைக் கணக்கில் கொண்டுதான், முடிவுகளை கூகுள் வெளிப்படுத்தும். கூகுளின் அல்கரிதம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கூகுள், ஆப்பிள் ‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டது என தகவல்
‘டிக்-டாக்’ செயலியை நீக்குமாறு கூகுள், ஆப்பிள் நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டது.
2. கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடம், காங்கிரஸ் 6-வது இடம்
கூகுளில் அரசியல் விளம்பரம் செய்வதில் பாஜக முதலிடத்திலும், காங்கிரஸ் கட்சி 6-வது இடத்திலும் உள்ளன.
3. கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,648 கோடி அபராதம் : ஐரோப்பிய யூனியன் விதித்தது
அமெரிக்காவை சேர்ந்த இணையதள ஜாம்பவானான ‘கூகுள்’ நிறுவனத்துக்கு நேற்று போட்டிகளுக்கான ஐரோப்பிய யூனியன் கமி‌ஷனர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,648 கோடி அபராதம் விதிப்பதாக அறிவித்தார். ஒப்பந்த விதிகளை மீறியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.