உலக செய்திகள்

இலங்கை பிரதமராக நாளை மீண்டும் பதவியேற்கிறார் ரனில் விக்ரமசிங்கே? + "||" + Wickremesinghe likely to take oath as Sri Lanka's PM on Sunday

இலங்கை பிரதமராக நாளை மீண்டும் பதவியேற்கிறார் ரனில் விக்ரமசிங்கே?

இலங்கை பிரதமராக நாளை மீண்டும் பதவியேற்கிறார் ரனில் விக்ரமசிங்கே?
இலங்கை பிரதமராக மீண்டும் ரனில் விக்ரமசிங்கே பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு,

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந் தேதி தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதை சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்தது. மேலும் ராஜபக்சே மற்றும் அவரது மந்திரிசபை செயல்பட அப்பீல் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து ராஜபக்சே தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

நாடாளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சிறிசேனாவின் இந்த நடவடிக்கை சட்ட  விரோதமானது என நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

இதைத்தொடர்ந்து அதிபர் சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய சிறிசேனா, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.

இதற்கிடையே இலங்கையில் பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ள ராஜபக்சே ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே நேற்று தனது டுவிட்டரில், ‘இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே, இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றி விட்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பரபரப்பான இலங்கை அரசியல் சூழலில்,  ரனில் விக்ரமசிங்கே இலங்கை பிரதமராக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ரனில் விக்ரமசிங்கேவுடன் நேற்று தொலைபேசியில் இலங்கை அதிபர் சிறிசேனா பேசியதாகவும், இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ரனில் விக்ரமசிங்கேவை பிரதமராக நியமிக்க சிறிசேனா ஒப்புதல் தெரிவித்து இருப்பதாகவும் இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருப்பதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவியேற்பார் என்று விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. 6 மாதங்களில் 2-வது முறையாக இந்தியா வருகிறார், இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ராஜபக்சே
6 மாதங்களில் 2-வது முறையாக இலங்கை எதிர்கட்சித்தலைவர் ராஜபக்சே இந்தியா வருகை தர உள்ளார்.
2. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
3. இலங்கையில் மேலும் 49 இந்தியர்கள் கைது
இலங்கையில் மேலும் 49 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
4. இலங்கை - ஆஸ்திரேலியா டெஸ்ட்: பவுன்சர் பந்து தாக்கியதில் நிலைகுலைந்த கருணரத்னே
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பட் கம்மின்ஸ் வீசிய பந்தில் இலங்கை வீரர் கருணரத்னே நிலைகுலைந்து சுருண்டு விழுந்தார்.
5. இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 384 ரன்கள் குவிப்பு - ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதம்
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 384 ரன்கள் குவித்துள்ளது. ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதம் விளாசினர்.