உலக செய்திகள்

அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா + "||" + Bharathiar birthday party in United States

அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா

அமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா
அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தில் மகாகவி பாரதியாரின் 137-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவின்போது சிறுவர்-சிறுமிகளுக்கான ஓவியப்போட்டி, வினாடி-வினா போட்டி, பெரியவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆகியவை நடைபெற்றது.

வாஷிங்டன்,

சிறப்பு விருந்தினர்களாக வாசு அரங்கநாதன், அகத்தியன் ஜான் பெனடிக்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த விழாவை பிரசாத் பாண்டியன், துரைக்கண்ணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், டெலவர், பென்சிலவேனியா மற்றும் நியூஜெர்சி ஆகிய மாகாணங்களை சேர்ந்த தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம்
அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய போலீஸ் அதிகாரிக்கு டிரம்ப் புகழாரம் சூட்டினார்.
2. உலகைச் சுற்றி...
அமெரிக்காவுடன் நடுத்தர ரக அணு ஆயுதங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
3. அமெரிக்கா: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
அமெரிக்காவில் நிகழ்ந்த சாலை விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
4. அமெரிக்கா: கலிபோர்னியா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி, 4 பேர் காயம்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர்.
5. அமெரிக்காவில் ஓய்வை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்
அமெரிக்காவில் ஓய்வை முடித்து, நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்ப உள்ளார்.