உலக செய்திகள்

பணத்தை பெறுவதை விட என்னை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது: விஜய் மல்லையா + "||" + India Focused On Getting Me Than Recovering Money: Vijay Mallya To NDTV

பணத்தை பெறுவதை விட என்னை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது: விஜய் மல்லையா

பணத்தை பெறுவதை விட என்னை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது: விஜய் மல்லையா
பணத்தை பெறுவதை விட என்னை பிடிப்பதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
லண்டன்,

பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ. 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடனாக பெற்று விட்டு அதனை திரும்பி செலுத்தாமல் தப்பியோடிய விஜய் மல்லையா, லண்டனில் உள்ளார்.  அவரை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.

இதுதொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவரை இந்தியா கொண்டுவர லண்டன் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விஜய் மல்லையாவுக்கு பெருத்த பின்னடைவாக இது பார்க்கப்படுகிறது.  

இந்த நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சியான என்.டி.டிவிக்கு அளித்த பேட்டியில் விஜய் மல்லையா கூறியிருப்பதாவது:- இந்தியா வருவதற்கான உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் விவாதித்து  வருகிறேன். அதற்கான வாய்ப்புகள் இருந்தால் மேல் முறையீடு செய்வேன்.

நான் 2016-லேயே பணத்தை வழங்குவதாக அறிவித்திருந்தேன். ஆனால் பணத்தை வாங்க கூடாதென்று வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையிலேயே என்னிடம் இருந்து பணத்தை வாங்குவதற்கு பதிலாக என்னை இந்தியாவுக்கு கொண்டு வருவதில்தான் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...