உலக செய்திகள்

”30-க்கும் மேற்பட்ட ஆவிகள் என்னுள் புகுந்து விட்டது ” 300 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்‌‌ + "||" + Brazilian faith healer accused of sexually assaulting 300 women turns himself in

”30-க்கும் மேற்பட்ட ஆவிகள் என்னுள் புகுந்து விட்டது ” 300 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்‌‌

”30-க்கும் மேற்பட்ட ஆவிகள் என்னுள் புகுந்து விட்டது ” 300 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மதபோதகர்‌‌
30-க்கும் மேற்பட்ட டாக்டர்களின் ஆவி தன்னுள் புகுந்து 300 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விட்டது என்று மதபோதகர்‌‌ கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலில் கடவுளின் தூதர் என்று அழைக்கப்படும் ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா என்பவர் மதபோகராகவும், மனநல டாக்டராகவும் பனியாற்றி வருகிறார். இவர் ஆன்மீக முறையில் மனநல நோய்களுக்கும் சிகிச்சை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகளும் சர்ச்சைகளும் எழுந்து வந்தது.

இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜவாகோ மீது சில மாதங்களுக்கு முன் அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பிரேசில் போலீசார் அந்த மதபோதகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் கூறுகையில்,  30-க்கும் மேற்பட்ட டாக்டர்களின் ஆவி என் மீது புகுந்து விட்டது. அதனால் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினார். இந்தநிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் சரண்டைந்தார்.