உலக செய்திகள்

சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி + "||" + A car bomb killed 8 people in Syria

சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி

சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 8 பேர் பலி
சிரியாவில் கார் குண்டுவெடிப்பில் 8 பேர் பலியாயினர்.
டமாஸ்கஸ்,

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் உள்ள அப்ரின் மாவட்டம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நகரில் உள்ள புகழ்பெற்ற சந்தையில் நேற்று முன்தினம் மாலை ஏராளமான மக்கள் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து வெடிக்க செய்தனர். இதில் வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அங்கு கரும் புகை மண்டலம் உருவானது.

மக்கள் அனைவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி மக்களில் 8 பேர் உயிர் இழந்தனர். மேலும் காரை ஓட்டி வந்த பயங்கரவாதிகள் இதில் பலியாகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
சிரியாவின் இத்லீப் நகரில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி 24 பேர் உயிர் இழந்தனர்.
2. கென்யா: விமான விபத்து - 5 பேர் பலி
கென்யாவில் சிறிய ரக விமானம் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
3. உலகைச் சுற்றி...
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
4. ஜார்கண்டில் பஸ் விபத்தில் 5 பேர் பலி
ஜார்கண்டில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.
5. சிரியாவில், 2 நாட்களில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாப சாவு
சிரியாவில், 2 நாட்களில் 11 பச்சிளம் குழந்தைகள் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...