உலக செய்திகள்

நைஜீரியா: முன்னாள் ராணுவ தளபதி சுட்டுக் கொலை + "||" + Nigeria: Former Army Commander shot dead

நைஜீரியா: முன்னாள் ராணுவ தளபதி சுட்டுக் கொலை

நைஜீரியா: முன்னாள் ராணுவ தளபதி சுட்டுக் கொலை
நைஜீரியா நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அபுஜா,

நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்த அலெக்ஸ் பாடே அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அலெக்ஸ் பாடே கடந்த 2012-ம் ஆண்டு விமானப்படை தளபதியாகவும், 2014-ம் ஆண்டு முப்படைகளின் தளபதியாகவும் பதவி வகித்தவர். இவர் ஜூலை 2015-ம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.


தற்போது பணி ஓய்வு பெற்ற நிலையில், நேற்று மாலை காரில் சென்றபோது அபுஜா-கெஃபி நெடுஞ்சாலையில் அலெக்ஸ் பாடே காரை வழிமறித்த  மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் நடந்த மூன்று தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
2. நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் சாவு
நைஜீரியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர்.
3. நைஜீரியா நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக முகம்மது புஹாரி பதவியேற்பு
நைஜீரியா நாட்டின் அதிபராக இரண்டாவது முறையாக முகம்மது புஹாரி பதவியேற்றுக் கொண்டார்.
4. நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 மீனவர்கள் உயிரிழப்பு
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 மீனவர்கள் உயிரிழந்தனர்.
5. நைஜீரியாவில் இந்திய மாலுமிகள் 5 பேர் கடத்தல் - மீட்க மத்திய அரசு நடவடிக்கை
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 5 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.