உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* சிரியாவில் அமெரிக்க படை விலகினாலும், பிரான்ஸ் படை தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ், கனடாவில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சீனாவுக்கும், கனடாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடாவை சேர்ந்த 2 பேர் சீனாவில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போது 3-வதாக சாரா மெக்இவர் என்ற கனடா பெண் சீனாவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த புகாரின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

* அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடலை தற்காலிகமாக தடுப்பதற்கு வழிசெய்யும் சட்ட மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானில் ஹெராத் மாகாணத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் 4 பேர் பலியாகினர். பாக்லான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தாக்குதலில் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.

* அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி செய்ததாக கனடாவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவருக்கு 40 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்கா அணு ஆயுத அச்சுறுத்தலை விலக்கிக்கொள்ளாத வரையில், வடகொரியாவும் அணு ஆயுதங்களை விட்டு விடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* மெக்சிகோவில் 2 எரிபொருள் கடத்தல் கும்பல்களிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகைச்சுற்றி...
அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து வருவதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
2. உலகைச்சுற்றி...
* வெனிசூலாவில் அதிபர் நிகோலஸ் மதுரோவை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நடத்தி வரும் போராட்டங்கள் குறித்து, செய்திகளை சேகரித்து வெளியிட்டதற்காக வெளிநாடுகளை சேர்ந்த 5 பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் நாடு கடத்தப்படுகிறார்கள்.
3. உலகைச்சுற்றி...
* தீபாவளி பண்டிகையையொட்டி, ஐ.நா. அஞ்சல் முகமை சிறப்பு தபால் தலை வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது. இதற்காக இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அக்பருதீன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதற்கிடையே தீபாவளி வாழ்த்து தெரிவித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ செய்தி வெளியிட்டார். அதில் அவர் இருளை ஒளி வீழ்த்தி வெற்றி கண்டதைக் கொண்டாடும் பண்டிகை தீபாவளி என கூறி உள்ளார்.