உலக செய்திகள்

‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை + "||" + Echo of 'Giga' Virus: Do not go to pregnant women for Rajasthan - America warns

‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை

‘ஜிகா’ வைரஸ் பாதிப்பு எதிரொலி: ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை
ஜிகா வைரஸ் பாதிப்பு காரணமாக, ராஜஸ்தானுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்,

இந்தியாவுக்கு சுற்றுலா செல்லும் அமெரிக்கர்களில், கர்ப்பிணிகள் யாரும் ராஜஸ்தான் மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமெரிக்காவின் தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேற்கண்ட மாநிலங்களில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் இந்த வைரஸ் தாக்கினால், கடுமையான குறைபாடுடன் கூடிய குழந்தை பிறக்கும். எனவே கர்ப்பிணிகள் அங்கு செல்ல வேண்டாம்” என்று கூறப்பட்டுள்ளது.