பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


பசிபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2018 8:18 AM GMT (Updated: 24 Dec 2018 8:18 AM GMT)

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டாங்கா தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

பசிபிக் தீவில் உள்ள டாங்கோ பகுதியில் திங்கட்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆகப் பதிவாகியது. இந்த நிலநடுக்கம் 100 மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. 

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் நெருப்பு வளையம் என்ற பகுதியில் டாங்கா தீவு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story