உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 28 Dec 2018 11:00 PM GMT (Updated: 28 Dec 2018 4:54 PM GMT)

* ஆப்கானிஸ்தானில் கஜினி மாகாணத்தில் அமெரிக்க போர் விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியதில் 15 பயங்கரவாதிகள் பலியாகினர்.

* சீனாவின் உளவுத்துறை அமைப்பின் முன்னாள் தலைவர் மா ஜெயின் என்பவருக்கு ஊழல் வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

* மெக்சிகோவில் சாண்டா மாரியா டெல் ரியோ என்கிற இடத்தில் நடந்த பஸ் விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் மிகவும் பாராட்டுதலுக்குரிய பெண் என்ற சிறப்பை முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா பெற்றுள்ளார். அதேபோல் மிகவும் பாராட்டுதலுக்குரிய ஆண் என்ற சிறப்பை ஒபாமா தொடர்ந்து 11–வது ஆண்டாக தக்கவைத்துள்ளார்.

* மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்க்கினா பாசோவில் போலீசாரை குறிவைத்து ஆயுதம் ஏந்திய குழுக்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர்.

* ஜோர்டான் வெளியுறவுத்துறை மந்திரி அய்மன் சபாதி நேற்று ரஷியா சென்றார். அங்கு அவர் சிரியா விவகாரம் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

Next Story