உலக செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 7 பேர் பலி + "||" + US winter storms kill seven: Media

அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 7 பேர் பலி

அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 7 பேர் பலி
அமெரிக்காவில் பனிப்புயலில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.
சிகாகோ,

அமெரிக்காவில் அரிசோனாவில் இருந்து டெக்சாஸ் வரை கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.  இதனால் கனமழை பெய்ய கூடும்.  வளைகுடா கடலோர பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட கூடும்.

இந்த பனிப்புயலால் 30 சென்டிமீட்டர் அளவிற்கு பனி படர்ந்து உள்ளது என தேசிய வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.  இதனால் நேற்று 1,006 விமானங்கள் காலதாமதமுடன் சென்றன.  129 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டகோடாஸ், மின்னசோட்டா, கான்சாஸ் மற்றும் அயோவா நகரங்களில் பல இடங்களில் கடந்த வியாழ கிழமை சாலைகள் மூடப்பட்டு இருந்தன.  இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரிசெய்யும் பணிகள் நேற்று நடந்தன.

இந்த பனிப்புயலால் அமெரிக்காவில் 7 பேர் பலியாகி உள்ளனர் என ஊடக தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத மழை: வீதிகளில் உலாவும் முதலைகள்; மக்கள் அச்சம்
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் குயின்ஸ்லாந்து மாகாணம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.
2. ஆஸ்திரேலியாவில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம்: மீட்பு பணிகள் தீவிரம்
ஆஸ்திரேலியாவில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்துள்ளது.
3. இந்தோனேசியா: கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு - 9 பேர் பலி
இந்தோனேசியாவில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர்.
4. பிலிப்பைன்சில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலி
பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 68 பேர் பலியாகினர்.
5. இலங்கை வடக்கு மாகாணத்தில் கன மழையால் வெள்ளம், 45 ஆயிரம் பேர் பாதிப்பு
இலங்கை வடக்கு மாகாணத்தில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 45 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...