உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 30 Dec 2018 10:45 PM GMT (Updated: 30 Dec 2018 7:08 PM GMT)

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.


* காங்கோ நாட்டில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மார்ட்டின் பாயுலு, பெலிக்ஸ் சிசேக்கடி, இமானுவல் ஷாதாரி ஆகிய 3 வேட்பாளர்கள் இடையேதான் முக்கிய போட்டி. பதற்றமான சூழலில் அங்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

* தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அணு ஆயுத கைவிடல் தொடர்பாக புதிய ஆண்டில் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்து உள்ளார்.

* கொலம்பியா நாட்டின் அதிபர் இவான் டுக்கை கொல்ல சதி நடந்துள்ளது. இது தொடர்பாக வெனிசூலா நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

* ஈராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடக்கே அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிக்கி அப்பாவி உள்ளூர்வாசி ஒருவர் பலியானார்.

* ஆப்கானிஸ்தானில் பாரா மாகாணத்தில் நடந்த சாலையோர குண்டுவெடிப்புகளிலும், ஆளில்லா விமான தாக்குதலிலும் தலீபான் பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஜனவரி 3-ந் தேதி துருக்கிக்கு 2 நாள் அரசு முறை பயணம் செல்கிறார். அந்த நாட்டின் அதிபர் எர்டோகனை சந்தித்து ஆப்கானிஸ்தானில் அமைதி, நல்லிணக்கம் ஏற்படுத்த தான் மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து அவர் விளக்குவார் என பாகிஸ்தானில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


Next Story