பத்திரிகையாளரின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை எடுத்துச் செல்லும் காட்சி : துருக்கி மீண்டும் வீடியோ வெளியீடு


பத்திரிகையாளரின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை எடுத்துச் செல்லும் காட்சி : துருக்கி மீண்டும் வீடியோ வெளியீடு
x
தினத்தந்தி 1 Jan 2019 8:04 AM GMT (Updated: 1 Jan 2019 8:04 AM GMT)

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை விவகாரம் தொடர்பாக, சவுதி அரேபியாவுக்கு எதிராக துருக்கி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி அந்நாட்டு அரசையும், மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபி மொழியிலும் கட்டுரை எழுதி வந்தார். அதனைத் தொடர்ந்து துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்திற்கு சென்ற அவர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். 

இந்த கொலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாக வெளியான தகவல், உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக சவுதிக்கு எதிராக கண்டனங்கள் ஒருபுறம் எழுந்தன. ஆனால், இந்த கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சவுதி முதலில் மறுத்தது. பின்னர் சாட்சியங்கள் வலுவாக இருந்ததைத் தொடர்ந்து ஒப்புக்கொண்டது. அதன் பின்னர் சவுதிக்கு எதிராக வீடியோ ஒன்றை துருக்கி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை துருக்கி வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்த செய்தியை துருக்கியின் ஹபர் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ‘இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அதிகாரியின் இல்லத்துக்கு, ஜமால் கசோக்கியின் வெட்டப்பட்ட உடல் பாகங்களை 3 நபர்கள் பெரிய பை ஒன்றில் எடுத்துச் செல்கிறார்கள். இந்த இல்லம் சவுதி தூதரகத்திற்கு அருகில் தான் அமைந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story