அமெரிக்காவின் பொருளாதார தடை நீடித்தால் பாதை மாறுவோம்: வடகொரியா திடீர் எச்சரிக்கை


அமெரிக்காவின் பொருளாதார தடை நீடித்தால் பாதை மாறுவோம்: வடகொரியா திடீர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Jan 2019 10:23 AM GMT (Updated: 1 Jan 2019 10:23 AM GMT)

அமெரிக்காவின் பொருளாதார தடை நீடித்தால் பாதை மாறுவோம் என்று வடகொரியா திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பியாங்யாங்,

சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதம் மூலம் உலக நாடுகளை மிரட்டியதால், வடகொரியா மீது ஐநா மற்றும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்தன. இந்த நிலையில், கடந்த ஆண்டு சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், வட கொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டது. இதனை வரவேற்ற அமெரிக்கா, அணு ஆயுதங்களை முற்றிலும் அழித்தால் மட்டுமே பொருளாதார தடை அமலில் இருக்கும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் பொருளாதார தடை விலக்கப்படாவிட்டால், இறையாண்மையை காப்பதற்காக பாதையை மாற்றுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து  கிம் ஜாங் அன் கூறியதாவது:- “ உலக நாடுகளுக்கு முன்  அமெரிக்கா அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும். எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை மற்றும் அழுத்தங்களை அமெரிக்கா விலக்காவிட்டால், எங்களது இறையாண்மை மற்றும் தேசநலனை பாதுகாக்க வேறு வழிகளை நாட வேண்டியதை தவிர வேறு வழியில்லை.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயாராக உள்ளேன். அப்போது, சர்வதேச சமூகம் வரவேற்கும் முடிவு எடுக்கப்படும். தென் கொரியா- அமெரிக்கா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சியை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

Next Story