உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
சிரியாவில் இருந்து அமெரிக்க படைவீரர்களை உடனடியாக திரும்ப பெறும் முடிவை ஜனாதிபதி டிரம்ப் மாற்றிக்கொண்டார்.
* சிரியாவில் இருந்து அமெரிக்க படைவீரர்களை உடனடியாக திரும்ப பெறும் முடிவை ஜனாதிபதி டிரம்ப் மாற்றிக்கொண்டார். அதாவது அடுத்த 4 மாதங்களுக்கு சிரியாவில் அமெரிக்க படைகள் இருக்க அவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

* ரஷியாவின் மக்னிடோகோரஸ்க் நகரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 7-ஆக உயர்ந்தது. மேலும் 40 பேரை காணவில்லை.

* ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கூடியிருந்த மக்களின் மீது வாலிபர் ஒருவர் காரை கொண்டு மோதினார். இதில் 9 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

* துருக்கியில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோக்கியின் உடல் பாகங்களை பெட்டிகளில் வைத்து எடுத்து செல்லும் வீடியோ பதிவை துருக்கி செய்தி சேனல் வெளியிட்டது.

* பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் உள்ள கோடபடோ நகரில் வணிக வளாகத்துக்கு வெளியே குண்டு வெடித்ததில் 2 பேர் உடல் சிதறி உயிர் இழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. உலகைச் சுற்றி...
சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் சிரிய ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
2. சிரியாவில், 2 நாட்களில் 11 பச்சிளம் குழந்தைகள் பரிதாப சாவு
சிரியாவில், 2 நாட்களில் 11 பச்சிளம் குழந்தைகள் பலியான பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலி
சிரியாவில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலில் 11 பேர் பலியாயினர்.
4. சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் தொடங்கியது.
5. சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை - டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டம்
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை என டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.