ரஷ்யாவில் மினி பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலி


ரஷ்யாவில் மினி பேருந்து தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலி
x
தினத்தந்தி 2 Jan 2019 1:48 AM GMT (Updated: 2 Jan 2019 1:48 AM GMT)

ரஷ்யாவில் மினி பேருந்து ஒன்று தீப்பிடித்து வெடித்ததில் 3 பேர் பலியாகி உள்ளனர்.

ஏகடெரீன்பர்க்,

ரஷ்ய நாட்டில் மேக்னிடோகார்ஸ்க் என்ற நகரில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரவடா ஆகிய இரு தெருக்கள் சந்திக்கும் பகுதியில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து ஒன்றில் தீப்பிடித்து உள்ளது.

அந்த காரில் 3 பேர் பயணம் செய்து உள்ளனர்.  காரில் 2 வாயு சிலிண்டர்கள் இருந்துள்ளன என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மினி பேருந்து தீப்பிடித்ததில் அதில் இருந்த வாயு சிலிண்டர்கள் வெடித்துள்ளன.  இந்த சம்பவத்தில் அதில் இருந்த 3 பேர் பலியாகி உள்ளனர்.  இதனை உள்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.

இந்த சம்பவம் நடந்த பகுதி அருகே கடந்த திங்கட்கிழமை குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.  இதில் 9 பேர் பலியாகினர்.  6 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story