ரஷியா: கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு


ரஷியா: கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு
x
தினத்தந்தி 2 Jan 2019 5:11 PM GMT (Updated: 2 Jan 2019 5:11 PM GMT)

ரஷியாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 21 ஆக உயர்ந்துள்ளது.

மாஸ்கோ,

ரஷியாவின் அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததால் 48 வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 21 ஆக உயர்ந்துள்ளது.

ரஷியாவின் உரால் பிராந்தியத்துக்கு உட்பட்ட மக்னிடோகோரஸ்க் என்ற நகரத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த திங்களன்று காலை இங்கு உள்ள ஒரு வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து 48 வீடுகள் தரைமட்டமானது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

இந்த கோர விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. அங்கு நிலவிவரும் கடுமையான பனிமூட்டம் மற்றும் குளிருக்கு இடையில் இரண்டு நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.  

இந்நிலையில், இன்று மாலை இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த 21 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் 14 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு வசித்தவர்களில் மேலும் 20 பேரை காணவில்லை என உறவினர்கள் குறிப்பிட்டுள்ளதால் அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story