உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2 Jan 2019 9:17 PM GMT)

ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணம் மய்வாந்த் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.


* புத்தாண்டையொட்டி நாட்டு மக்களிடையே உரையாற்றிய வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க தான் தயாராக இருப்பதாக கூறினார். தற்போது டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

* மெக்சிகோவின் ஒயாசாகா மாகாணத்தில் உள்ள டெலாக்சிகோ நகரத்தின் மேயராக அல்ஜன்டிரோ அப்பரசிகோ என்பவர் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். ஆனால் அவர் பதவி ஏற்ற 2 மணி நேரத்தில் மர்ம நபர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்.

* ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணம் மய்வாந்த் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர்.

* இத்தாலியின் எல்.அகுலியா மாகாணத்தில் உள்ள கொல்லலோங்கோ நகரில் ரிக்டர் அளவுகோலில் 4.1 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

* இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம் சுகாபுமி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்தது. 20 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள போர்ட் பென்ட் கவுண்டி கோர்ட்டின் நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த கே.பி.ஜார்ஜ் பதவி ஏற்றார்.

* பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் லோராலாய் என்கிற இடத்தில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இதில் 4 பயங்கரவாதிகளும், 4 ராணுவ வீரர்களும் பலியாகினர்.



Next Story