உலக செய்திகள்

பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு + "||" + In the New Year's celebration in France, 8 people in the wheel were recovered by helicopter

பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
பிரான்சில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ராட்டினத்தில் சிக்கிய 8 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள பிரித்தானியா பிராந்தியத்தின் தலைநகர் ரென்னஸ். இங்கு நேற்று முன்தினம் இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதிக உயரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கும் ஒரு ராட்டினத்தில் சிறுவர்கள் உள்பட 8 பேர் ஏறி அமர்ந்தனர். கீழே இருந்து புறப்பட்டு 170 அடி உயரத்துக்கு சென்ற அந்த ராட்டினம் திடீர் எந்திர கோளாறு ஏற்பட்டு, மேல் பகுதியிலேயே நின்றுவிட்டது.


இதனால் ராட்டினத்தில் இருந்த அனைவரும் பயத்தில் அலறி துடித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ராட்டினத்தில் சிக்கியவர்களை பத்திரமாக கீழே இறக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து 10 மணி நேர போராட்டத்துக்கு பிறகு, ராட்டினத்தில் சிக்கிய 8 பேரும் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் திருடப்பட்டது: 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த பிகாசோ ஓவியம்
பிரான்சில் திருடப்பட்ட பிகாசோ ஓவியம், 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது.
2. பிரான்சில் தோண்ட தோண்ட கிடைத்தது ரூ.100 கோடி தங்கப்புதையல்
பிரான்சில் தோண்ட தோண்ட ரூ.100 கோடி அளவில் தங்கப்புதையல் கிடைத்துள்ளது.
3. மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் நடவடிக்கை
மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க பிரான்ஸ் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.
4. மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீண்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ்
பாகிஸ்தான் பயங்கரவாதி மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை மீண்டும் பிரான்ஸ் முன்னெடுக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
5. பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில் போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரருக்கு 1 ஆண்டு சிறை
பிரான்ஸ் மஞ்சள் அங்கி போராட்டத்தில், போலீசாரை தாக்கிய குத்துச்சண்டை வீரருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.