உலக செய்திகள்

மாலியில் தாக்குதல் பழங்குடியின மக்கள் 37 பேர் பலி + "||" + In Mali, tribal people killed 37

மாலியில் தாக்குதல் பழங்குடியின மக்கள் 37 பேர் பலி

மாலியில் தாக்குதல் பழங்குடியின மக்கள் 37 பேர் பலி
மாலியில் நடத்தப்பட்ட தாக்குதலில், பழங்குடியின மக்கள் 37 பேர் பலியாயினர்.
பமாகோ, 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியின் மத்திய பகுதியில் உள்ள மோப்தி பிராந்தியத்தில் கோலோகன் என்கிற கிராமம் உள்ளது. இங்கு புலானி எனப்படும் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கிறார்கள். கால்நடை மேய்ப்பதை பிரதான தொழிலாக கொண்ட இவர்களுக்கும், ஆயுதம் ஏந்திய வேட்டைக்காரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கோலோகன் கிராமத்துக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த வேட்டைக்காரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டுத்தள்ளினர். மேலும் அங்கிருந்த வீடுகளுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடினர்.

இந்த தாக்குதலில் பழங்குடியின மக்கள் 37 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது
படப்பிடிப்பில் புகுந்து நடிகையை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. டி.வி. நடிகை மீது தாக்குதல்
பிரபல தெலுங்கு டி.வி. நடிகை ராக மாதுரி. கடந்த 16-ந் தேதி டி.வி. படப்பிடிப்பை முடித்துவிட்டு காரில் வீட்டுக்கு திரும்பினார்.
3. மாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் - 41 பேர் கொன்று குவிப்பு
மாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
4. புல்வாமாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் குண்டுவீச்சு
புல்வாமாவில் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டை வீசியுள்ளனர்.
5. கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது தாக்குதல்: மாவட்டத்தில் 3 ஆயிரம் டாக்டர்கள் வேலைநிறுத்தம்
கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்து திருச்சி மாவட்டத்தில் 3 ஆயிரம் டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்தனர்.