சிறைச்சாலையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை அனுமதிக்க மறுப்பு


சிறைச்சாலையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை அனுமதிக்க மறுப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 PM GMT (Updated: 3 Jan 2019 4:15 PM GMT)

சிறைச்சாலையில் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை அனுமதிக்க பஞ்சாப் மாகாண அரசு நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இஸ்லமாபாத்,

அல்–அஜிசியா உருக்காலை தொடர்பான ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள கோட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், முன்னாள் பிரதமர் என்கிற ரீதியில், தனது உத்தரவின் பேரில் பணிகளை செய்ய கைதி ஒருவரை உதவியாளராக வைத்து கொள்ள  நவாஸ் ஷெரீப்புக்கு உரிமை உள்ளது.

ஆனால் நவாஸ் ஷெரீப்புக்கு உதவியாளரை நியமிக்க பஞ்சாப் மாகாண அரசு மறுத்துவிட்டது. அவருடைய அறையை பராமரிப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அவரே பார்த்துக்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது.

Next Story