உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 3 Jan 2019 9:30 PM GMT (Updated: 3 Jan 2019 7:52 PM GMT)

பெல்ஜியம், டொமினிக்கன் குடியரசு, ஜெர்மனி, இந்தோனேசியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு குழுவில் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

* ரஷியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவை சேர்ந்த பவுல் வீலன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவரை ரஷியா கைது செய்திருப்பதாக கனடா தெரிவித்துள்ளது.

* ரஷியாவின் மக்னிடோகோரஸ்க் நகரில் கியாஸ் சிலிண்டர் வெடித்து அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்து தரைமட்டமானதில் பலியானோரின் எண்ணிக்கை 37-ஐ எட்டியது. இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஈரான் மற்றும் சவுதி அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

* பிரேசிலில் புதிய அதிபராக பதவியேற்ற ஜெயிர் பொல்சொனாரோ பொருளாதாரத்துக்கென பிரத்தியேகமாக புதிய அமைச்சகத்தை உருவாக்கி உள்ளார். பொருளாதார மந்திரியாக பவுலே கியுடெஸ் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

* மெக்சிகோவில் வேலை கிடைக்காமல் இருக்கும் இளைஞர்கள் தேசிய பாதுகாப்புபடையில் சேரும்படி அதிபர் லோபஸ் ஒப்ரடார் அழைப்பு விடுத்துள்ளார். இதன் மூலம் வேலை இல்லா திண்டாட்டம் முடிவுக்கு வருவதே ாடு, நாட்டில் குற்றங்களும் தடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Next Story